வியாழன், 18 ஜூன், 2009

வாழ்த்து
எல்லோரும் விரும்புவது ..-எப்போதும் ...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை ....
நீ -உயிராய் நினைத்து நேசிப்பதை ...
உன்னை நேசித்த இதயங்கள் ....
ஏற்க் மறுத்து விட்டால் -அப்போது ....
ரத்த பந்தமாக இருந்திட்டாலும் ....
அவர்கள் யாராயினும் -உனக்கு ...
எதிரியாக தெரிவார்கள் ....
சொந்தமில்லா இந்த அம்மாவிற்கு .....
என்ன -பதில் சொல்லுவதென்று புரியவில்லை ...
பொதுவாக சுயநலமாக -உனக்கு ...
பதில் சொல்ல மனம் இடம்தரவில்லை ...
நானும் -ஓரு அம்மா என்ற முறையில் .....
நீ -விரும்புவதை உன்னை விரும்பும் ....
இதயங்களும் நேசித்து ஏற்றால் ....
இந்த -அம்மாவின் வாழ்த்தும் ....
உணக்கு உண்டு எப்போதும் ...
யாருக்கும் தெரியாமல் ....
உண்மையில் நல்ல மனதுடன் ..
உன் -நம்பிக்கை ஓரு வேளை ....
உன்னை -கைவிடும் பட்ச்சத்தில் ...
மீன் -தொட்டியில் நீந்தும் ....
மீன் குஞ்சுகள் பசிக்கு துடிப்பது -போல் ...
நீயும் உன் நேசிப்பும் கலங்கினால் ...
இந்த அம்மாவின் மனம் தாங்காது ...

இதயம்
கிள்ளி எறிந்த இதயத்தை -நீ ...
அந்த குள்ளி கிள்ளி எறிந்த -இதயத்தை ...
சேற்றிலிருந்து எடுத்தாயோ காப்பதற்கு -நீ ....
ஆனால் உன் கையில்லிருந்து ........
தவறிய இதயம் இரண்டாக ......
உடைந்து கிழே விழுந்தது -ஏனோ ..
அத்தகைய பலகீனமான ...
இதயம் யாருடையதோ ....
உன் -கை தவறி சிதறிய இதயம் .....
நீ -கொஞ்சம் இறுக்கிப்பிடித்து -அதை ...
நழுவ விட்ருந்தால் சில்லு
சில்லாய் உடைந்திருக்குமோ ...

1 கருத்து:

  1. இந்த கவிதை ஒரு தாயின் பரிதவிப்பை பிரதி பலிக்கிறது.......
    அவளின் ஏக்கங்கள்,மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடியாத இயலாமை,இன்னும் பல வருத்தங்களையும்,ஏக்கங்களையும் உங்களின் வரிகள் தாங்கி இந்த இணையதளத்தில் உலா வருகின்றன......

    பதிலளிநீக்கு