அன்புள்ள மகனுக்கு
அன்புள்ள மகனுக்கு -உன் ...
அப்பா அம்மா எழுதும் ...
அன்புக் காடிதம் ...
நீ -குளு குளு அறையில் ....
கணிப்பொறியில் பனி செய்யினும் ...
நம் - கரிச்சல் காட்டை ....
மறக்க மனம் இல்லையோ ....
ஏர் பிடித்த உன் -தந்தையின் ...
கரம் பிடித்து நடக்க -இனி ...
உனக்கு -இப்போது நேரம் கிடைக்குமோ ..
வெயில் மழையில் நனைந்தாலும் ...
கஞ்சி குடித்தாவது -நாங்கள் ...
எம் நிலை மாற -உன்னை ...
படிக்க வைத்து வீண் போகவில்லை ...
மகனே -கூலிகள் எனும் நம் நிலை ....
இப்போது -மாறி போனாலும் ...
உயர்நிலையில் இருந்தாலும் ...
பட்டாம் பூச்சியாய் -நீ ...
எங்களுடன் வயல் காட்டில் ...
திரிந்த இனிய நினைவுகள் ...
இனி -எப்போது கிடைக்குமோ ...
உலகம் -சுற்ற நீ எங்களை ....
அழைத்தாலும் இக் கிராமமே ....
எங்களுக்கு உலகம் அப்பா ...
இங்கு இருக்கும் இயற்கையும் ....
குளு குளு காற்றும் ....
மனம் -தொட்ட தென்றலும் ...
இனிய -மண் வாசனையும் ...
சல சலக்கும் ஆற்று நீரும் ...
அங்கு கிடைக்குமோ ...
பள பளக்கும் பட்டினத்தில் ....
உண்மை -அன்பு கிடைக்குமா ...
முதலில் நீயோ சில நாட்கள் ....
கிராமம் வந்து எங்களுடன்
தங்கிவிடு தங்கிவிடு ...
அது போதும் எங்களுக்கு ....
எப்போதும் சந்தோசம் ....
வருகிறோம் வருகிறோம்
எம் -வாழ் நாட்களின் இறுதியில் ...
உன்னுடனே இருப்பதற்கு ..
நாங்கள் இங்கு இருந்தாலும் ..
எம் -மனங்களோ எப்போதும் ...
உன்னை சுற்றி மட்டுமே
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக