செவ்வாய், 9 ஜூன், 2009

பெற்றோர் நிலை
பணமிருந்தும் காசிருந்தும் .....
கால் வயிறு உன்ன முடியலப்பா ....
பந்தமிருந்தும் பாசமிருந்தும் ...
அதில் -உண்மை எதுவும் இல்லையப்பா .....
சொத்து சுகம் சேர்த்தது போல் .....
உண்மை அன்பை சேர்க்க முடியலப்பா .....
பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகளோ ...
நெஞ்சில் எட்டி உதைக்குதப்பா ....
சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு .....
சீதனமாய் கண்ணீரை தருகுதப்பா ....
காதல் சேற்றில் விழுந்து விட்டால் .....
ஊமை -மனங்களாய் இருக்குதப்பா .....
பருவத்தினை அடைத்த குஞ்சுகளோ ....
சிட்டாய் எங்கோ பறக்குதப்பா .....
பந்த பாசத்தை அறுத்து விட்டு .....
பறவையாய் பறந்து மறையுதப்பா ....
மானத்தை உயிராய் நினைப்போரே ....
மண்ணுடன் மண்ணாய் மறைகின்றனரப்பா .....
பெற்றகடன் என்பது காடு சேர்தலப்ப ....
பெற்றோர் சிதைக்கு கொள்ளி வைதலப்பா ....
மானுட நீதிகள் மறையுதப்பா ....
உயிருடன் இருக்கும் பெற்றோர்க்கு ....
பிள்ளைகள் அவர்கள் மனதில் ..
கொள்ளி வைத்து பொசுக்குதப்பா ...
மழலை செல்வம் இல்லாதோர்
வாழ்ந்து பயனில்லை எனும் ....
நிலை -மாறி வருகுதப்பா ....
மழலை பெறாதோர் கொடுத்து வைத்த .....
பெற்றோர் என் புகழும் நிலை ....
உருவாகி வருகுதப்பா

நம்பிக்கை
மலையும் கடுகாம் ......
தன்னம்பிக்கை சிகரத்திற்கு ......
மடுவும் மலையாம் ....
நம்பிக்கையில்லா அகரத்திற்கு

காத்திருப்பு
நீரோடையில் வற்றிய நீரில் ....
நீ -என்கே போனாய் ....
கொக்காய் நானும் காத்து இருக்கேன் ....
எனக்கான உன்னை தின்பதர்க்கே.,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக