என் நினைவுகள் (நான்கு)
நின்று விட்டனர் அவர்கள் ....
நான்கு முடிந்து ஐந்தாவகுப்பு ஆரம்பம் ..
சுத்தம் ஆங்கிலமும் கணக்கும் பாடம் ...
நடந்தால் கணமட்டும் அங்கு இருக்கும் ...
மண்டையில் எதுவும் ஏறது ...
தேர்வின் போது படிக்க பயந்து ....
தினமும் குழந்தைகளுக்கு சத்துணவு ....
தயாரிக்க ஐந்தாம் வகுப்பிலிருந்து ...
மூவர் செல்லவேண்டும் படிக்காத போது ..
நான் போகிறேன் என எழுந்து சமைக்க ..
போய்விடுவேன்
latha:
எச் .எம் கொடுக்கும் ஓரு ரூபாவில் ....
பள்ளிக்கு எதிரில் இருக்கும் வொர்க்சாப்பில் ...
இருவத்தி ஐந்து காசுக்கு பெட்ரோலும் ....
சிறிது தூரம் சென்றால் புளிய மரத்திற்கு ....
அடியில் மரபெட்டி உடைபவர்களிடம் .....
இருவத்தி ஐந்து காசுக்கு மரத்துண்டு ...
வாங்கிக்கொண்டு மளிகை கடையில் ....
பத்து காசுக்கு கடுகு உளுத்தம் பருப்பு ....
வாங்கிக்கொண்டு இன்னும் சிறிது...
தூரம் சென்று காய்கடையில் மீதி ...
நாற்பது காசுக்கு மிளகாய் வெங்காயம் ....
வாங்கிவந்து கோதுமை ரவையில் .....
எங்களைவிட பெரிய பாத்திரத்தை வைத்து ...
விறகு அடுப்பு பற்ற வைத்து ....
சத்துணவு ஓரு மணிக்குள் சமைத்து தரவேண்டும் ..
பின்பு அப் பாத்திரங்களை செங்கல் கொண்டு ...
பளிஸ் என்று தேய்த்து வைப்பதற்கும் ...
பள்ளி முடிந்து பெல் அடிப்பதற்கும் ...
சரியாய் நேரம் முடிந்து விடும்
அரையாண்டு தேர்வில் தமிழ்லில் ...
வெறும் ஐந்துமார்க் யாரிடமும் ...
பேசாத அமைதியான அப்பா ....
அம்மா இந்தமாதிரி மார்க் எடுகிராளே...
சுத்த மக்கு என்று ..திட்டியதும் ....
லதா என்ற அவள் பெயரை சரியாக ....
கையெழுத்து போடதெரிந்தால் போதும் ...
என்று சப்போட் செய்தார் இருந்தாலும் ....
ஐந்து மணிக்கு எழுப்பி தமிழ் கற்று கொடுத்தார் ...
அப்பாவும் அ ஆ ஒழுங்காக எழுத் ......
தெரியாமல் ஒறே ஓரு அடி தலையில் ..
விழுந்தது இன்றும் மறக்க முடியாது ...
எப்படியோ படித்து பரிட்சை முடிந்தது ..
எல்லோரும் பாஸ் அப்பெல்லாம் ....
படித்தாலும் படிக்காவிட்டாலும் ...
ஐந்தாம் வகுப்புவரை எல்லோரும் பாஸ்தான்
செவ்வாய், 16 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக