செவ்வாய், 9 ஜூன், 2009

சந்தோஷ பூந்தோட்டம் அமைத்து .....
சந்தோசமாய் வாழ்ந்திடுவோம் .....
அழகு பூக்களை பெற்று ......
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்

கிராமத்து ஆசை
கஞ்சி கலையம் எடுத்து ....
கருவாட்டு துவையல் செஞ்சி ....
தலைமேலே சுமந்து வரும் ....
மல்லிகை பூ கொண்டைகாரி ....
மையில் கணக்காய் நீ நடந்து -வந்தாய் .....
எம் -மனசு நோகுதடி தங்கமே....
நீ -வந்த பதையில்லே ......
கல்லும் முள்ளும் குத்தியதோ ....
கால்வயிறு கஞ்சிக்காக ....
கதிர்றருத்து களைபறிக்கும் -எல்லோருக்கும் ....
களைப்பு தெரியாமல் வேலை செய்ய ...
மனம் குளிர பாடுபவளே.....
மட்சானின் மனசுகுள்ளே....
ஆசை ஒன்னு இருக்குதம்மா .....
நம் -காலம் முடியும் முன்னே......
நாலு காசு சேர்த்து வைத்து .....
காதோலை மூக்குத்தியும் ......
ஐந்துவட சங்கிலியும் உன் -கழுத்தில் ....
பூட்டிவிட்டு உன் முகத்தில் .....
சிரிப்புதனை மனம் குளிர பார்த்திடனும் ....
புள்ளகுட்டி எல்லாத்தையும் .....
.விவசாயம் படிக்கவைத்து
சீமைகெல்லாம் அனுப்பி வைத்து .....
கிராமங்களின் புகழ் பரப்பி .....
பொருளாதார தரம் உயர்த்தி ....
நம் -தமிழ் நாட்டை நிலை நிறுத்தி ....
உலக தரத்தில் தாய்நாட்டின் புகழ் -பறப்பி...
பாராட்டு பெறவேண்டும் ....
பார்புகழ வாழ்ந்திடுவோம் ....
மனிதனாய் பிறந்திட்ட ......
பிறவி பயன் அடைந்திடவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக