செவ்வாய், 9 ஜூன், 2009

தூது ஓலை
செங்கதிர் நிறத்தாளே ......
பூங்கொடி இடையாளே ......
வெண்மதி முகத்தாளே .......
உன் -கயல்விழி அசைவினிலே..,..
நான் -மதி மயங்கி நின்றேனே......
உன்-அதரங்களின் சிரிப்பினிலே.....
முத்து பற்கள் ஜொலிக்குதம்ம ........
.பிறை நிலா நெற்றியினிலே ....
நட்சத்திர பொட்டு மின்துதம்மா....
உன்- கிளி மூகுதனில் .......
புல்லாக்கு அசைந்து ஆடுதம்மா ...
என் -இதய ராணி நீ என்றால் .....
இமை மூடி ராஜகுமாரன் -எனக்கு ....
நீ- சம்மதம் சொல்லிடம்மா ...
எம் - படையுடன் வந்து உன்னை ....
பட்டத்து ராணியாய் அழைத்து செல்வேன் ....
ஓலையில் -வந்த உன் ஓவியமோ ..
என் -இதய கமலத்தில் ....
இன்பமாய் மலருதம்மா ...
என்னை சித்தம் கலங்க வைத்த ...
நீயும் - என் ஓவியத்தை கண்டு ....
உம்- மன நினைவுகளை மடல் -எழுதி .....
எம் - ஒற்றனிடம் தூது அனுப்பிடம்மா ....
வந்தனம் சொல்ல காத்திருக்கும் .....
உந்தன் -ராஜகுமாரன் நானம்மா

வெண்மை (தூய்மையானவள் )
வெண்புறாவே வெள்ளை -நிலாவே ....
பால்வண்ணம் கொண்டவளே ....
வெண்சங்கு கழுத்தினிலே.....
வெண்முத்து மாலையணிந்து ......
வெண்பஞ்சு மேகத்திலே.......
தேவதையாய் வந்தவளே....
தெளிந்த நீரோடையாம் என் -மனதில் ....
தெவிட்டாத தேன் சுரந்தாய் .....
ஈடில்லா - உன் அழகில் ......
மயங்கிட்ட என் மனதை ....
வெண்பணி போல் கறைதாயே ....
பாற்க்கடலாம் என் மனதை .....
அன்பெனும் மத்திட்டு கடைந்தாயே......
வெண்நுரை பொங்கும் அலைதனிலே .....
வெண்ணையாய் திரண்டதுவே என் -அன்பு ....
வெண்ணை உண்ட உன் -மனமோ .....
வெண் மேகமாய் விரிந்ததுவோ ....
என் -தூய அன்பை நீ ஏற்றிட்டாய் ....
பல -நிலையில் மாறினும் ......
கலப்படமில்லாத பாலதுவோ .....
வெண்மை நிறம் மாறாதது போல் ....,
நம் - அன்பும் மாறாது நிலைத்துவிடும் ......
வெள்ளை மனம் படைதோர்க்கு -நம் .....
அன்பின் -எல்லையை எட்டி பிடித்தால் ......
வெள்ளி - நிலாவை கையில் பிடித்தது போல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக