செவ்வாய், 9 ஜூன், 2009

கற்பூரம்
கற்பூரம் எரிந்தாலும் கரைகிறது ....
கற்பூரம் எரியாமலும் கரைகிறது .....
கற்பூரம் கண்ணீரில் கரைகிறது ....
மனித மனங்களின் நிலையும் -இதுதான் ...
மனம் கண்ணீரில் கரைகிறது .....
மனம் காதலில் கரைகிறது ....
மனம் சாதலில் கரைகிறது ....
மனம் பாசத்தில் கரைகிறது ....
மனம் அன்பில் கரைகிறது ....
மனம் அணைப்பில் கரைகிறது ....
கற்பூரம் கரைதலில் பக்தி இருக்கும் ....
இதில் என்னிலையிலும் யாருக்கும் துன்பமில்லை ...
ஆனால் -மனித மனங்களின் ....கரைதலில் ......
எத்தனையோ துன்பங்களும் வேதனைகளும் ......
நிட்சையம் எற்படுதல் உன்மையே ....
கற்பூரம் கரைந்தால் என் நிலையிலும் ....
அதன் வாசம் மாறாது நிலைக்கும் ...
சில நிமிடங்கள் ....
மனங்கள் கரைதலிலே ... -அதன்
நிஜங்கள் மாறிவிடும் பல நிமிடம் ......
மாதங்கள் ஆண்டுகள் ஆகலாம் ....
சில நேரங்களில்

வர்ணனை
வட்டநிலா முகத்தினிலே .....
பிறைநிலா நெற்ற்றியிலே......
செந்நிற குங்கும பொட்டும் .....
வில் வளைத்த புருவங்களும் ....
கெண்டை மீன் விழிகளில் ....
சுழன்றிடும் கருந்திராட்சை பாவைகளும் ....
கூறிய முந்திரிப்பழம் மூக்கும் ...
சிவந்த ஆப்பிள் கண்ணமும் ...
.அரஞ்சு சுளை உதடுகளும் ......
மாதுளை முத்து பற்களும் ....
வெண் சங்கு கழுத்ததுவும் .....
திரண்ட மார்பகங்களும் .....
உடுக்கை போல் பிடி இடையும் ....
.கிழங்கென திரண்ட கைகளும் .....
வாழை மரம் போன்ற கால்களும் ....
கருகருவென்று அடர்ந்து பாம்பெகான .....
தொன்று சாட்டையாய் அசையும் ஜடையும் .....
அழகிய பாவைகளை வர்ணிக்கும் ......
அழகு நிலைக்கலாம் அத்தனையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக