இங்கு படிக்கும் போது இடைவேளையின் ...
எல்லோரும் தணீர் அருந்த என் வீட்டிற்கு...
வருவார்கள் அங்கு இரண்டு குடத்தில் ...
ரெடியாக இருக்கும் தாத்தாவின் கட்டளை படி ....
அப்போதெல்லாம் தண்ணீர் கஷ்ட்டம் ....
தீனிகள் வித விதமாய் விற்கும் ..
பள்ளிவாசலில் ஓரு வயதான பாட்டி ....
குடவாரஞ்சு பழம் கொய்யாபழம் .....
முந்திரிப்பழம் கம்பு இனிப்பு உருண்டை ...
நாறு மிட்டாய் சேவாய் பழம் ...
கெலாக்காய்மாலை கெலாப்பழம் ..
விடாம்பலம் பென்சில் மிட்டாய் ...
இன்னும் நிறைய வகைகள் வைத்து இருப்பார் ...
ஓரு குடையின் கீழ் அமர்ந்து ....
வெயில்லில் பிள்ளைகளுக்கு காத்திருப்பது ....
பாவமாக இருக்கும் அந்த பாட்டிக்கு ...
உதவ அம்மாவிடன் தினமும் ...
காசு வங்கிசென்று பாட்டியிடம் எதாவது ..
வாங்கி ஏழை தோழிகளுக்கு கொடுப்பேன் ...
அங்கு இருக்கும் மைதானத்தில் இடைவேளையின் ..
.போது விளையாடுவோம் அங்கு குரவர்கள் ..
கூட்டம் இருவது குடில்களில் தங்கி இருப்பார்கள் ..
பண்ணி அறுத்து கூறு போடுவார்கள் எப்பா பார்த்தாலும் ..
இன்னும் அந்த கூட்டங்கள் அங்குதான் இருக்கின்றன ...
மைதானத்தில் மோடி மஸ்தான் வித்தைகளும் ...நடைபெறும்
கூடை ராட்டினங்களும்
கை சுற்று ராட்டினங்களும் போடுவார்கள் ....
அப்புறம் ஜவவரிசி சேமியா போட்ட ...
வெல்ல பாயாசமும் தள்ளு வண்டியில் ..
சர்பத் சேமியா ஐசும் விற்கும் ....
அந்த வயதான பாட்டியின் நிலை ..
இன்று என் மனதில் பசுமையாய் இருக்கிறது
செவ்வாய், 16 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக