செவ்வாய், 9 ஜூன், 2009

திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....
நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக