செவ்வாய், 16 ஜூன், 2009

நான் படித்த பள்ளியன் பெயர் ....
பாரதமாதாபிரைமரி பள்ளி ,....
சிறு வயதிலேஉண்மை பேசனும் ....
நீதி நேர்மை கடமை கடைபிடித்து ...
வாழவேண்டும் என்ற வெறி உண்டு ..
ஐந்தாம் வகுப்பில் ஏற்காடு டூர் ...
பள்ளியில் அழைத்து சென்றார்கள் ....
ஒருவருக்கு ஐந்து ரூபாய் சார்ஜ் ..
உணவு நாங்கள் எடுத்து சென்றோம் ..
பஸ்சுக்கு டிக்கெட் ஓரு ரூபாய் ..
அங்கு முதல்லில் ஓரு சர்சுக்கு அழைதுசென்றார்கள்..
பின்பு பட்டுபூஜி பண்ணைக்கும் .....
பக்கோடாபைண்ட் லேடிசிட் போட்அவுஸ் ..
அழைத்து சென்றார்கள் அங்கு சாப்பிட ...
முகம்அளவு பெரிய முறுக்கும் ....
மைசூர் பாகும் கொடுத்தார்கள் ..
மாலையில் திரும்பும் போது ...
டீ கடைக்கு அழைத்து சென்று .....
டீயும் பெரிய பண்ணும் வாங்கி கொடுத்தார்கள் ..
ஜாலியான ஐந்து ரூப்பா டூர் மறக்கமுடியாது ..
இந்த பள்ளி வாழ்கையில் மறக்கமுடியாத ....
தோழிகள் மகேசுவரி செல்வி ....
மகேசுவரிக்கு ஊசிபோட்டு அது ...
காலிலே எடுக்கமுடியாமல் தங்கியதால் ....
கால் ஊனம் இழுத்து இழுத்து நடப்பாள் ..
அவள் மீது இறக்கம் அதிகம் ..
நோட்டு எடுக்க அவளுக்கு துணையாக ...
அவள் வீட்டிற்கு சென்று இருகிறேன்


அவள் மிகவும் ஏழை அவளை ....
யாராவது கேலி செய்தால் தாத்தாவிடம்....
சொல்லி கண்டிப்பேன் ..செல்வி ..
அவளுடைய வீடு சுடுகாட்டில் இருக்கும் ...
ஓரு முறை சென்று இருகிறேன் ..
இதில் செல்வியையும் ரேனு நிர்மலா....
இவர்களை இன்றும் பார்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக